×

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது பெட்ரோல் பங்க்குகளில் மாற்றப்பட்ட ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டு எவ்வளவு?: தெரியாது என்கிறது ரிசர்வ் வங்கி

புதுடெல்லி: பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது பெட்ரோல் பங்க்குகளில் மாற்றப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டு எவ்வளவு என்று தெரியாது என  ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கருப்பு பணத்தை மீட்கும் நோக்கில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது. இது தவிர, பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், ரயில், பஸ் டிக்கெட், மின்சார கட்டணம் உட்பட 23 சேவைகளுக்கு மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. 2016 நவம்பர் 25ம் தேதி முதல் ரூ.500 நோட்டு மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. டிசம்பர் 15ம் தேதி வரை இந்த அனுமதி இருந்தும், முறைகேடு புகார்களை தொடர்ந்து டிசம்பர் 2ம் தேதியோடு ரூ.500 பயன்படுத்தவும் மத்திய அரசு தடை விதித்தது. இந்த சூழ்நிலையில், பெட்ரோல் பங்க், ரயில், பஸ் டிக்கெட்கள் உட்பட மேற்கண்ட 23 சேவைகளில் மாற்றப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டு எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, மேற்கண்ட 23 சேவைகளில் பயன்படுத்தப்பட்ட செல்லாத நோட்டு எவ்வளவு என்ற விவரம் தங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளது. செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு வங்கிகளில் அவற்றை பொதுமக்கள் டெபாசிட் செய்து மாற்ற 50 நா்ள் அவகாசம் தரப்பட்டது. இது தவிர, மேற்கண்ட சேவைகளில் மாற்றப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட செல்லாத நோட்டுகளும் வங்கிகள் மூலம் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. இவற்றின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வந்த ரிசர்வ் வங்கி,  வங்கிகளில் 99.3 சதவீதம் பழைய ரூ.500, ரூ.1,000 டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் முறைகேடாக மாற்றப்பட்டதால் அதற்கான அனுமதியை மத்திய அரசு நிறுத்திய நிலையில், இதற்கான தனி கணக்கு இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Reserve Bank
× RELATED மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை:...