×

தேமுதிக கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை : சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகளை அதிமுக நடத்தியுள்ளது. ஆனால் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக சென்னையில் அம்மா சமுதாய வானொலி சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

சமுதாய வானொலியில் தினந்தோறும் ஒரு கோடி மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுடன் முதல்வர் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்களுடன் உடனுக்குடன் அரசின் செய்திகள் சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கைப்பேசி மூலம் நவீன தொழில்நுட்பத்தில் அம்மா சமுதாய வானொலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புறம் முதல் கிராமம் வரை தமிழக அரசின் சாதனை, முக்கியத் தகவல்கள் தங்குத்தடையின்றி செல்ல வானொலி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக்கொள்கை 2019 புத்தகத்தை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். அந்த புத்தகத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பெற்றுக்கொண்டார். மேலும் கரூர் வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு புகளூர் வருவாய் வட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மண்மங்கலம், அரவக்குறிச்சி வருவாய் வட்டங்களை சீரமைத்து புகளூர் வருவாய் வட்டம் தொடக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy ,party executives , DMDK, Chief Minister Palanisamy, AIADMK, Vijayakanth, Lok Sabha election
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...