×

ஏர் இந்தியா விமானத்தில் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் ஜெய்ஹிந்த் ஒலிக்க வேண்டும் : ஏர் இந்தியா நிறுவனம் சுற்றறிக்கை

டெல்லி : ஏர் இந்தியா விமானத்தில் ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை ஒலிக்க அந்த விமான நிறுவனம் கட்டளையிட்டுள்ளது. இந்தியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் ஏர் இந்தியா. இந்த நிறுவனம் விமானங்களை மற்ற தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலையில் விமானங்களை இயக்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஏர் இந்தியா கடும் நிதிச் சுமையில் சிக்கி தவித்து வருகிறது.

இந்நிலையில் ஏர் இந்தியாவின் செயல் இயக்குனர் அமிதாப் சிங் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அதில் விமானி குழு தங்களது ஒவ்வொரு அறிவிப்பின் இறுதியிலும் ஜெய்ஹிந்த் என்னும் முழக்கத்தை கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதே மாதிரியான அறிவிப்பு கடந்த 2016ம் ஆண்டு ஏர் இந்தியா விமானி குழுவிற்கு வழங்கப்பட்டு இருந்தது.

இது குறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஏர் இந்தியாவின் ஒவ்வொரு விமானத்தில் ஒவ்வொரு முறை ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டு முடிக்கும் போது, ஜெய்ஹிந்த் என்ற தேசத்தை போற்றும் முழக்கத்தை ஒலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானிகள் மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசப் பக்தியை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.  

கடந்த 2016ம் ஆண்டு ஏர் இந்தியாவின் தலைவராக அஸ்வானி லோஹனி ஒரு அறிவுறுத்தலை அளித்திருந்தார். அதன்படி விமானத்தின் கேப்டன் பயணிகளுடன் உரையாற்றும் போதும் மற்றும் அறிவிப்பு அளிக்கும் போதும் ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை சேர்த்து கூற வேண்டும். விமான பயணிகளிடம் மிகவும் பணிவுடன் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jaihind ,announcement ,Air India , Air India, Jaihind, India, Ashwani Lohani
× RELATED விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8...