×

மகாராஷ்டிராவில் புதிதாக பிறந்த குழந்தைக்கு அபிநந்தன் என பெயரிட்ட பெற்றோர்

தானே: மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுக்கு புதிதாக பிறந்த குழந்தைக்கு அபிநந்தன் என பெயரிட்டுள்ளனர். பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானங்கள் அத்துமீறியபோது மிக்-21 பைசன் ரக போர் விமானத்தின் மூலம் இந்திய விமானி அபிநந்தன் விரட்டிச் சென்றார். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து அந்த விமானத்தை வழிமறித்து அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அப்போது பாகிஸ்தான் படையினர் தாக்கியதால், அவர் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் உயிர் தப்பித்தார். பாகிஸ்தானிடம் பிடிபட்ட அபிநந்தன் பின்னர் விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு திரும்பினார். பாகிஸ்தானில் இருந்து வாகா எல்லை வழியாக அவர் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்த நேரத்தில், மகாராஷ்டிரா தானே மாவட்டம் பீவண்டியைச் சேர்ந்த மன்ஜிலால் ஜெயின்-மோனிகா தம்பதிக்கு தனியார் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அபிநந்தன் என பெயரிட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தை மன்ஜிலால் ஜெயின் இதுகுறித்து கூறுகையில், “துணிச்சலான விமானப்படை வீரர் அபிநந்தனின் பெயரை எங்களுடைய குழந்தைக்கு வைக்க எங்கள் குடும்பம் முடிவு செய்தது. குடும்பத்தில் உள்ள அனைவரும் இதற்கு சம்மதித்தனர். குழந்தை வளர்ந்து பெரியவனாகி விமானி அபிநந்தனைப் போல பெயரெடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Parents ,baby ,Maharashtra , Maharashtra, Baby, Abhinanthan
× RELATED கணவர் இறந்த நிலையில் ஆறாவதாக பிறந்த...