×

தி.க. தலைவராக கலி.பூங்குன்றன் பொறுப்பேற்பார் : கி.வீரமணி அறிவிப்பு

தஞ்சை: தஞ்சையில், திராவிடர் கழக  மாநாடு நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட தி.க.தலைவர்  கி.வீரமணி நிருபர்களிடம் கூறும்போது:வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக  தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். பாம்பு வந்தால் எப்படி தடியை  கொண்டு அடித்து விரட்டுவோமோ அதேபோல் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். எனும் பாம்பு  வருகிறது. அதனை அடித்து விரட்ட வேண்டும். பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை  நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி உள்ளார். திராவிடர் கழகம் என்பது ஒரு சமூக புரட்சி இயக்கம். நான்  நீண்ட நாட்களாக அதன் தலைவராக இருந்து வருகிறேன். எனக்கு பிறகு  துணைத்தலைவராக இருக்கக்கூடிய கலி.பூங்குன்றன் தலைமை பொறுப்பை  ஏற்பார். இவ்வாறு வீரமணி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : head ,Tika K.Purunkaran ,committee ,K.Veramani Announcement , Dravidar Kazhagam, Kal.Pugunkaran, K.Verramani
× RELATED பொது மாறுதல் கலந்தாய்வு உடனே நடத்த...