×

ஹோண்டா ஷைன் பைக்கில் புதிய பிரேக்கிங் சிஸ்டம்

நாடு முழுவதும் வரும் ஏப்ரல் முதல் இருசக்கர வாகனங்களில் நவீன பிரேக்கிங் தொழில்நுட்பம் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து நிறுவனங்களும் நவீன பிரேக்கிங் தொழில்நுட்பத்துடன்  இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா சிபி ஷைன் மற்றும் சிபி ஷைன் எஸ்பி ஆகிய இரு பைக்குகளிலும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக,  இந்த இரு மாடல்களும் சிறப்பான பாதுகாப்பு அம்சத்தை பெற்றிருக்கின்றன.
ஏற்கனவே இந்த இரு மாடல்களின் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டுகளில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுவிட்டது. தற்போது, டிரம் பிரேக் மாடல்களிலும் இந்த வசதி கொடுக்கப்பட்டு வந்துள்ளன. பிரேக் பிடிக்கும்போது,  நிறுத்துதல் திறனை இருசக்கரங்களுக்கும் குறிப்பிட்ட விகிதத்தில் செலுத்தி, வண்டியை பாதுகாப்பாக நிறுத்தும் சிபிஎஸ் எனப்படும் இந்த காம்பி பிரேக்கிங் சிஸ்டம் 125சிசி ரகத்திற்கும் கீழான மாடல்களில் கட்டாயமாக உள்ளது.  அதற்கு மேலான மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாகிறது.

காம்பி பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட புதிய ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் டிரம் பிரேக் மாடல் ₹58,338 விலையிலும், சிபி ஷைன் எஸ்பி பைக் மாடல் ₹64,098 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். இந்த இரு  மாடல்களிலும் 124.73 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10.1 எச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிபி ஷைன் பைக்கில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஷைன் எஸ்பி  மாடலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த இரு பைக் மாடல்களிலும் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக்அப்சார்பர்களும் உள்ளன. வேறு எந்த மாற்றங்களும் இல்லை. 125 சிசி பைக் மார்க்கெட்டில் விற்பனையில் ஹோண்டா  சிபி ஷைன் முன்னிலை வகித்து வரும் நிலையில், இப்புதிய பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக இந்த பைக்கின் மதிப்பை உயர்த்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Honda Shine , Honda Shane ,Bike, New Breaking ,System
× RELATED புதிய வடிவமைப்பில் ஹோண்டா ஷைன்