×

சேலத்தில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: ஒருவர் பலி

சேலம்: சேலம் அருகே கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் சாலையோர பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பெங்களூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி 28 பயணிகளுடன் நேற்று இரவு 11 மணியளவில் புறப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் சேலம் அருகே வந்து கொண்டிருந்த போது, கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் அதிவேகமாக வந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த சேலம் மாநகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bus crash ,Salem , Salem, Omni bus, accident,
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின