×

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

சென்னை: சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளது. சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன. வீட்டு பயன்பாட்டுக்காக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,EU government ,
× RELATED நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி...