×

திருநாவுக்கரசர் மகன் திடீர் ராஜினாமா

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் திடீரென மாற்றப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி ஏற்ற விழாவில் பேசிய திருநாவுக்கரசர், ‘தலைவர் பதவியில் இருந்து மாற்றியது தனக்கு வருத்தம் தான் என்றாலும் ராகுல்காந்தியை சந்தித்து பேசியது உற்சாகத்தை தந்துள்ளது’ என்று குறிப்பிட்டு பேசினார். இந்நிலையில், அவரது மகன் எஸ்.டி.ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியில் சமூக ஊடக பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வந்தார். அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக எஸ்.டி.ராமச்சந்திரன் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைமை நியமிக்கப்பட்டிருப்பதால், புதிய தலைமைக்கு வழிவிட்டு எனது “மாநில ஒருங்கிணைப்பாளர்” பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : resignation ,Thirunavukarajar , Tamilnadu Congress, Thirunavukkarar, SD Ramachandran
× RELATED குஜராத்தில் காங். எம்எல்ஏ திடீர் ராஜினாமா