×

அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவதா? அண்ணாமலை அதிமுகவில் சேர்ந்து ஜெயலலிதா புகழ் பாடினால் ஓகே: மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தடாலடி

அலங்காநல்லூர்: ‘அண்ணாமலை ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதில் உள்நோக்கமும், அரசியல் சூழ்ச்சியும் உள்ளது. அண்ணாமலை அதிமுகவில் சேர்ந்து ஜெயலலிதா புகழ் பாடினால் ஓகே’ என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று அளித்த பேட்டி:‘ஜெயலலிதா இந்துத்துவா கொள்கையை கடைபிடித்தார். அவர் இல்லாததால் அதை நாங்கள் கடைபிடிக்கிறோம்’ என்று அண்ணாமலை கூறுகிறார்.

சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதில் உள்நோக்கம் உள்ளது, அரசியல் சூழ்ச்சி உள்ளது. அவரின் புகழ்ச்சிக்கு நாங்கள் ஒருபோதும் மயங்கமாட்டோம். வேண்டுமென்றால் அண்ணாமலை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினால் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
அவர் தற்போது பாஜவின் மறைந்த மூத்த தலைவர் வாஜ்பாயை புகழ்ந்து பேச வேண்டும். அத்வானி, அமித்ஷாவை புகழ்ந்து பேசி கவுரவிக்கலாம். அதை விடுத்து அதிமுகவின் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவது, ஏதோ சூழ்ச்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. இதில் உள்நோக்கமும் அரசியல் சூட்சுமமும் இருக்கிறது. அரசியல் உள்நோக்கத்துடன் அவர் பேசுவதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

புகழ்வது போல களங்கம் செல்லூர் ராஜூ கண்டனம்: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தளத்தில் ஜெயலலிதா, இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு திறப்பது, கிறிஸ்தவர்கள் நிகழ்ச்சியில் கேக் வெட்டுவது போன்ற படங்களையும் பதிவிட்டு, ‘‘ஜெயலலிதாவை புகழ்வது போல, இந்து தத்துவத்தை மட்டும் ஆதரித்ததாக கூறி ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம். ஜெயலலிதா எல்லா மதத்தையும் சமமாக மதித்தவர். சொந்த பணத்தில் இப்தார், கிறிஸ்துவ விழாவை நடத்தியவர்’’ என தெரிவித்துள்ளார்.

The post அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவதா? அண்ணாமலை அதிமுகவில் சேர்ந்து ஜெயலலிதா புகழ் பாடினால் ஓகே: மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தடாலடி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,AIADMK ,Jayalalitha ,Former minister ,RB Udayakumar Thadaladi ,Alankanallur ,Annamalai Jayalalithaa ,RB Udayakumar ,Former ,minister ,Alankanallur, Madurai district ,Jayalalithaa ,
× RELATED சொல்லிட்டாங்க…