×

இந்த ஆண்டு வெற்றி நிறைந்த ஆண்டாக அமையட்டும்…கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து!!

சென்னை : கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணியை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2016ம் ஆண்டு முதல் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,”“கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு வெற்றி நிறைந்த ஆண்டாக அமையட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” இவ்வாறு அதில் கூறியுள்ளார். அதே போல், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ கேரளாவின் உறுதியான தலைவருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள், பினராய் விஜயன். கேரள மக்களுக்கான உங்களின் அர்ப்பணிப்பும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைமையும் தொடர்ந்து மாநிலத்தை உயர்த்தி வருகிறது. உங்கள் முன்னோக்கிய பயணம் வெற்றியுடனும் செழிப்புடனும் இருக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

The post இந்த ஆண்டு வெற்றி நிறைந்த ஆண்டாக அமையட்டும்…கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,K. Stalin ,Kamalhassan ,Chennai ,Tamil Nadu ,Chief Minister MLA ,Kerala government ,Spider River ,Dinakaran ,
× RELATED கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்திப்பு..!!