×

குஜராத்தில் காங். எம்எல்ஏ திடீர் ராஜினாமா

அகமதாபாத்: குஜராத்தில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களை வென்று பாஜ ஆட்சியை தக்க வைத்துள்ளது. இத்தேர்தலில் அனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தொகுதியில் போட்டியிட்ட பாஜ எம்எல்ஏ மகேஷ் ராவலை காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிராக் படேல் 3,700 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் தலைமை குழுவாக செயல்படுவதாக கூறிய சிராக் படேல் எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை சபாநாயகர் சங்கர் சவுதாரியிடம் சமர்ப்பித்துள்ளார்.

The post குஜராத்தில் காங். எம்எல்ஏ திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Congress ,Gujarat ,MLA ,Ahmedabad ,Legislative Assembly ,BJP ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...