×

விரைவில் அனைவரும் அவரைவிட்டு வருவர் டிடிவி.தினகரன் ஒரு சர்வாதிகாரி

திருவாரூர்: டிடிவி தினகரன் ஒரு சர்வாதிகாரி என்றும் அவர் கிச்சன் கேபினட் வைத்துக்கொண்டு நம்பி வந்தவர்களை இம்சைப்படுத்துவதால் அனைவரும் அவரைவிட்டு விரைவில் வெளியேறுவர் என்றும் திவாகரன்  தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணாவின் 50-வது நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் உள்ள அவரது சிலைக்கு அண்ணா திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் திவாகரன் நேற்று மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார். அப்போது நிருபர்களிடம் திவாகரன் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் ஒரு சில அம்சங்கள் வரவேற்கத்தக்க வகையில் உள்ளன. அதன்படி ரூ.5 லட்சம் வரையில் வருமான உச்சவரம்பு என்பது  வரவேற்கத்தக்கது. இருப்பினும் விவசாயிகளுக்கு போதுமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அமமுக என்பது ஒரு மூழ்கும் கப்பல். அதனை வழிநடத்தும் டிடிவி தினகரன் ஒரு விஷக்கிருமி.

இது மட்டுமின்றி சர்வாதிகாரத்துடன் கிச்சன் கேபினட் வைத்துக்கொண்டு தன்னை நம்பி வந்தவர்களை இம்சைப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவரை விட்டு தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமல்ல அனைவரும் வெளியேறும்  காலம் வந்துவிட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஓரணியில் இணைப்பதற்கு ஒரு சிலர் முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் கட்சிகளின் கூட்டணி மற்றும் வாக்கு வங்கிகளை பொறுத்துதான்  நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். அந்த வகையில்  வரும் 24ம் தேதி நடைபெறும் எங்களது கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு பின்னர் செயற்குழு கூடி நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு திவாகரன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dictator , Dt.Dinakaran, dictator, Kachin cabinet
× RELATED டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பொது...