×

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணி மும்முரம்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி அகல ரயில்பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. இதனால் மார்ச் மாதம் ரயில் சேவை துவங்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர்  திருத்துறைப்பூண்டி அகலரயில்பாதை திட்டத்தில் காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரையிலான 122 கி.மீ தூர மீட்டர் கேஜ் ரயில் பாதை  அகலரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தவழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. அதன்படி இந்த அகல ரயில்பாதை திட்டமானது மிகவும் தாமதமாகநடைபெற்றுவந்த நிலையில் ஒரு வழியாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரையிலான 72 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு கடந்தாண்டு மார்ச் மாதம் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் வரையிலான இத்திட்டமானது கிடப்பில் போடப்பட்டநிலையில் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்கென ரூ.240 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாகநடைபெற்று வருகிறது. அதன்படி பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் வரை ஒரு பிரிவாகவும், தில்லை விளாகத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வரை ஒரு பிரிவாகவும், திருவாரூ ரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை மற்றொரு பிரிவாகவும்  என 3 பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை 26 கிமீ தூரத்தில் திருநெல்லிக் காவல் வரையில் 15 கிமீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் கடந்தஆகஸ்ட் மாதம் 30ம் தேதி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்கப்பட்டு திருநெல்லிக்காவல் வரை நடைபெற்றது.கடந்த ஆண்டு அக்டோபர் 26ம்தேதி திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான 25 கிமீ அகலரயில் பாதை பணிகள் நிறைவு பெற்று ரயில் என்ஜின் சோதனை ஒட்டம் நடைபெற்றது. அதன்பிறகு ரயில்வே நிலைய கட்டிடங்கள், தடுப்பு சுவர்கள், பிளாட்பார்ம்கள், எலக்ட்ரிக்கல் பணிகள், ரயில் நிலையநடை மேம்பாலம், ரயில்வே கேட் அருகில் சிக்னல் அமைக்கும் பணி போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் பிப்ரவரி மாதத்தில் பணிகள் நிறைவு பெறும் எ ன எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற உள்ளது. அதேபோன்று திருத்துறைப் பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை வரை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சிஆர்எஸ் (கமிஷன் ஆப் ரயில்வே சேப்டி) அனுமதி  கிடைத்த பிறகு வரும் மார்ச் மாதம் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளது.ரயில் சேவைஎப்போது துவங்கும் என்று பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruvarur - Tiruthirapoondi - Karaikudi Stretch Railway , Tiruvarur, Karaikudi, railway track
× RELATED பாஜகவுக்கு கூட்டணி அமைக்காததால் தான்...