×

பணியின் போது கைபேசி பயன்படுத்தும் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் : டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை

சென்னை : காவலர்கள் பணியின்போது கைபேசியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஏராளமான காவலர்கள் பணியின்போது தேவையின்றியும் அளவுக்கு அதிகமாகவும் கைபேசி பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார். இதனால் பணியில் தகவலை பெறுதல், சிந்தனை, கவனம், செயல்வேகம், உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் போக்குவரத்து ஒழுங்கின் போது கைபேசிகள் பயன்படுத்துவதால் வீதிமீறல்களை கவனிக்க முடியாமலும், தவறு செய்பவர்களை பிடிக்க முடியாமலும் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 விஐபி பாதுகாப்பு, போராட்டம், திருவிழா, போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்ட பணியின் போது, உதவி ஆய்வாளர்கள் அந்தஸ்துக்கு கீழே உள்ள காவலர்கள் கைபேசியை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். பணியின்போது கைபேசி பயன்படுத்துவதை தவிர்த்து கடமையில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி இருக்கிறார். பணியின் போது கைபேசியை பயன்படுத்தும்  காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DGP ,TG Rajendran , Guards, Circular, DGP, TK Rajendran, Order, Action
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...