×

சென்னையில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை 21-ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: எழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை ஜனவர் 21-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும்  வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன், 4 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அங்கன்வாடிகளை இணைக்கும் திட்டத்தை அரசு  செயல்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக மாநில அளவில் 2 ஆயிரத்து 381  அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன், அருகே உள்ள அங்கன்வாடிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பள்ளி வளாகங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்கி சிறுவர், சிறுமியரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கன்வாடிகள் இணைக்கப்பட்ட பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு  கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடிகளுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 2,381 அரசு உயர்நிலை,  மேல்நிலை புள்ளிகளுடன் அங்கன்வாடிகள் இணைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கும் திட்டத்தை, சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மாநில மகளிர் பள்ளியில் ஜனவரி 21-ம் தேதி  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy , Chennai, Elgji, UKG Std, Chief Minister Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...