ராயல் என்பீல்டு கிளாசிக் ரெட்டிச் 350-வந்தாச்சு ஏபிஎஸ்

ராயல் என்பீல்டு கிளாசிக் ரெட்டிச் 350 மோட்டார் சைக்கிள் மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வரும் ஏப்ரலில் அறிமுகமாக இருக்கும் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்றாற்போல், தனது மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்து வருகிறது ராயல் என்பீல்டு நிறுவனம். அந்த வரிசையில், தற்போது கிளாசிக் ரெட்டிச் 350 மாடலிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இரண்டு சக்கரங்களுக்குமான டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது.

கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் அடிப்படையிலான ரெட்டிச் வரிசையில் விற்பனை செய்யப்படும் ரெட்டிச் ரெட், ரெட்டிச் க்ரீன் மற்றும் ரெட்டிச் புளூ ஆகிய மூன்று வண்ணங்களிலும் இந்த ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் இனி கிடைக்கும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளின் அடிப்படையிலான இந்த விசேஷ வண்ண மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். இந்த மோட்டார்சைக்கிள் மாடலில் 346 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது, அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ரெட்டிச் ்மோட்டார் சைக்கிளில் முன்சக்கரத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மோட்டார் சைக்கிளில் முன்புறத்தில் 35 மி.மீ டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்சக்கரத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் இடம்பெற்றுள்ளன. தோற்றம், இன்ஜின் உள்ளிட்டவற்றில் எந்த வித்தியாசங்களும் இல்லை. ஆனால், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மட்டும் இந்த மாடல்களில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. திடீரென பிரேக் பிடிக்கும்போது, சக்கரங்களின் சுழற்சி திடீரென தடைபடாத விதத்தில் சக்கரங்களை சீராக நிறுத்தும் வசதியை இந்த ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அளிக்கும். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ரெட்டிச் மாடல் ₹1.46 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்பட்டது. இப்போது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சேர்க்கப்பட்ட மாடல் ₹1.79 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: