×

வரி விதிப்பு, கையாளும் முறையால் குழப்பம்: இன்ஸ்பெக்டர் முறை ஒழிந்து ஜிஎஸ்டியால் கன்சல்டன்ட் ராஜ்ஜியம் உருவாகிவிட்டது

சென்னை: ஜி.எஸ்.டிஇன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம் முறை ஒழிந்து தற்போது கன்சல்டன்ட் ராஜ்ஜியம் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அறிக்கை: சரக்கு மற்றும் சேவை வரி ஒரு முற்போக்கான வரிமுறை, மக்களால் தாங்க முடியாத அளவிற்கு மிக உயர்வான வரி வீதங்களும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் வணிகத் துறையினரால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத வகையில் பல்வேறு சந்தேகங்களுடன் ஜி.எஸ்.டி சட்ட விதிகள் உள்ளன.  மேலும், தலைசிறந்த ஆடிட்டர்களால் கூட பொறுப்பேற்கும் வகையில் சட்ட விளக்கம் கொடுக்க முடியவில்லை.

ஆயிரக்கணக்கான தொழில் வணிகர்கள் இந்த வரிமுறை அமலாக்கப்பட்ட பிறகு தங்கள் வணிகத்தை நிறுத்திவிட்டனர். முன்னர், அதிகாரிகளின் இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம் இருந்தது, இப்பொழுது ஜி.எஸ்.டி சட்டத்தில் கன்சல்டன்ட் ராஜ்ஜியம் உருவாகிவிட்டது. எனவே முறையாக கணக்கு வைத்துக் கொள்வதற்கான செலவு தாங்கமுடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது. சேவைக்கு 18 சதவீதம் வரி என்பது மிகக் கொடுமையானது, இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எதெல்லாம் சேவை என்று புரியாமல் தொழில் வணிகத்துறையினர் தவிக்கும் தவிப்பு மிக உச்சக்கட்டத்தில் உள்ளது. சேவைக்கு 12 சதவீதம்தான் வரி என்று நிர்ணயம் செய்து குழப்பங்களை நீக்க வேண்டும்.

வரி வீதத்தை குறைத்தால் வரி ஏய்ப்பு குறைந்து வரி செலுத்துவது அதிகரித்து வரி வருவாய் உயரும் என்ற பொருளாதார தத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஜி.எஸ்.டி சட்ட விதிகளும், படிவங்களும் எளிமையாக்கப்படுவதோடு, வெவ்வேறு விளக்கங்கள் கொடுக்கக் கூடிய வகையில் ஜி.எஸ்.டி சட்ட விதிகளில் உள்ள குழப்ப நிலையை மத்திய அரசும், ஜி.எஸ்.டி கவுன்சிலும்  மாற்ற வேண்டும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : GSTC Consultant Kingdom , Taxation, inspector, gst, consultant
× RELATED வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல...