×

திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்த 100 பேர் கைது

சென்னை: நுங்கம்பாக்கத்தில் இரவு நேரங்களில் திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்ததாக 100 பேரை கைது செய்துள்ளதாக போலீசார்  தெரிவித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலை, வள்ளுவர் கோட்டம், சூளைமேடு பகுதிகளில் இரவு நேரங்களில்  திருநங்கைகள் சாலையோரம் நின்று பைக்கில் செல்லும் வாலிபரை பாலியலுக்கு அழைத்து தொந்தரவு செய்ததாக போலீசாருக்கு தொடர் புகார்கள்  வந்தது. இதையடுத்து நுங்கம்பாக்கம் மற்றும் சூளைமேடு போலீசார் திருநங்கைகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அப்போது திருநங்கைகள் பாலியல் தொழிலுக்கு மாற்றாக ஓட்டல்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை  ஊதியத்தில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் திருநங்கைகள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. மீண்டும் அவர்கள்  இரவு நேரங்களில் சாலையோரம் நின்று வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். இதனால் போலீசார் அதிரடியாக ஒரு முடிவுக்கு வந்தனர்.  திருநங்கைகளிடம் பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்களை போலீசார் கைது செய்ய முடிவு செய்தனர். இந்த வகையில் கடந்த 4 மாதத்தில் 100  வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ேநற்று முன்தினம் வள்ளுவர் கோட்டம் மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலையில் திருநங்கைகளுக்கு தொந்தரவு கொடுத்தாக ஆழ்வார் திருநகரை  சேர்ந்த ஜான்பால் (40), விருகம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர்(34) ஆகிய இருவரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இதுவரை திருநங்கைகளை  பாலியலுக்கு அழைத்த வாலிபர்களை மட்டும் போலீசார் கைது செய்து வந்தனர். இனி திருநங்கைகளையும் கைது செய்ய போலீசார் முடிவு  செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
* புழல் டீச்சர்ஸ் காலனி, 5வது தெருவை சேர்ந்த டேனியல் (45) என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் 30 சவரன் நகைகள், டேபிளில்  வைத்திருந்த ₹25 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.
* வேலூரில் இருந்து புழலுக்கு மினி வேனை கடத்திய பெரியபாளையம், கருமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த டிரைவர் பாலகிருஷ்ணன் (28)  என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது புழல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில்  இருப்பது குறிப்பிடத்தக்கது.
* திருவான்மியூர் மருந்தீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (58) என்பவர் கடந்த 10ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, இன்சூரன்ஸ்  அதிகாரிகள் போல் நடித்து பீரோவிலிருந்த ₹4 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கோவிந்தமாளின் உறவினரான சரண்யா (28) மற்றும் அருணகிரி  (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
* காதல் தோல்வியால் விரக்தியடைந்த போரூர் அடுத்த மதனந்தபுரம், மாதா நகரை சேர்ந்த சதீஷ் (27) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார்.
* கொடுங்கையூரில் பைக்குக்கு வாட்டார் வாஷ் செய்தபோது, மின்சாரம் பாய்ந்து கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சதீஷ்குமார் (31) என்பவர்  உயிரிழந்தார்.
* மாதவரம் பால்பண்ணையை சேர்ந்த பால் வியாபாரி சந்தானகிருஷ்ணன் (32) என்பவரை கடந்த 21ம் தேதி வழிமறித்து அவரை கத்தியால் தாக்கி,  அவரது பைக்கை பறித்த மாதவரம் பால்பண்ணையை சேர்ந்த பிரபல கொள்ளையன் தேவா (எ) தேவராஜ் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* அம்பத்தூர் மண்ணூர்பேட்டை குயவர் தெருவில் மாவா தயாரித்து விற்பனை செய்த  பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்ராய் (36) என்பவரை போலீசார்  கைது செய்தனர்.
* கடன் தொல்லை காரணமாக மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம் விவேகானந்தர்நகர் விரிவு பகுதியை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் சேர்மன் துரை  (30), தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* சென்னையில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த அயனாவரம் விஜி (33) உட்பட 13 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
* ஏழுகிணறு செல்ல பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பஷீர் என்பவரின் செல்போன் கடையில் வேலை பார்த்து வரும் ரபிக்கான் (36)  என்பவரிடம் இருந்து ₹60 லட்சத்தை பறித்த வழக்கில் கிஷோர், சதீஷ், தாவூத் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த  சவுகார்பேட்டையை சேர்ந்த முத்துசரண் (28) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹15 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
* கொண்டித்தோப்பு ஏழுகிணறு தெருவை சேர்ந்த வியாபாரி முகமது அசேன் (28) என்பவரின் வீட்டிற்குள் புகுந்து 4 சவரன் நகை, ₹45 ஆயிரத்தை  கொள்ளையடித்த ராயபுரம் செட்டி தோட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை மோகன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து  14 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ₹1 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மூதாட்டியிடம் 37 ஆயிரம் அபேஸ்
விருகம்பாக்கம் வெங்கடேசன் நகரை சேர்ந்தவர் நாராயணி (75). இவர் நேற்று  முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்  மையத்திற்கு  சென்றார். அப்போது அவருக்கு சரியாக கண் தெரியாததால் ஏடிஎம் மையத்திற்கு  வந்த வாலிபரிடம் 3 ஆயிரம் பணத்தை எடுத்து  தரும்படி கூறி உள்ளார். ஏடிஎம்  கார்டுக்கான ரகசிய எண்ணும் வாலிபரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி,  அந்த வாலிபர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து  ₹3 ஆயிரம் பணத்தை எடுத்து  ஏடிஎம் கார்டுடன் மூதாட்டியிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு நாராயணி  வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில்  அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி  ஒன்று வந்தது. அதில் வங்கி கணக்கில் இருந்து 37 ஆயிரம் பணம்  எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Transgender, sexually charged, 100 arrested
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை