×

தொழிலாளியை கொன்று கொலையாளி தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் அருகே மத்தியசேனையை சேர்ந்தவர் படுகளம்(58). பட்டாசு தொழிலாளி. இவர் நேற்று காலை தனது ஆட்டுக்கு தழை பறித்துக்கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். விருதுநகர் அருகே சோமசுந்தராபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லச்சாமி(57). இவர் மத்தியசேனையில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை டூவீலரில் வேலைக்கு சென்றார். மத்தியசேனை அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் முன்னால் சைக்கிளில் சென்ற படுகளத்தின் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம்முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த படுகளம்,அரிவாளால் செல்லச்சாமியை கழுத்து, முதுகு, கை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து பதற்றத்துடன் அங்கிருந்து சென்ற படுகளம் போலீசுக்கு பயந்து அப்பகுதியில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Virudhunagar ,Padukalam ,Madhyasena ,Cellasamy ,Somasundarapuram Nadutheru ,
× RELATED திருவல்லிக்கேணியில் போதை பொருள்...