×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ பாடல் டிச.9ல் வெளியீடு

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் ‘பேட்ட’ பட பாடல்கள் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ரஜினியுடன் விஜய் சேதுபதி முதல்முறையாக இணைந்து நடிக்கிறார். அதேபோல் திரிஷாவும் முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக் தமிழில் இப்படம் மூலம் அறிமுகம் ஆகிறார். சிம்ரன், பாபி சிம்ஹா, முனிஷ்காந்த் உள்பட பலர் நடிக்கின்றனர்.

எந்திரன் படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் முதல் லுக் மற்றும் படத்தின் பெயர் வெளியானபோது உலக அளவில் பேட்ட டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது. தொடர்ந்து பேட்ட பட இரண்டாவது லுக், மூன்றாவது லுக் வெளியாகி வைரலானது. இந்நிலையில், பேட்ட படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டிசம்பர் 3ம் தேதி படத்தின் முதல் பாடல் ஒன்றும் 7ம் தேதி மற்றொரு பாடலும் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ரஜினியுடன் அனிருத் முதல் முறையாக இணைந்துள்ளதால் பேட்ட பட பாடல்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajini ,Batu ,release ,Sun Pictures , Rajini's 'petta' song , produced , Sun Pictures release on Dec. 9
× RELATED அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க ரஜினி மறுப்பு..!!