×

வளர்ச்சி திட்டங்களை பெற்று தருவேன்: சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் திருநீர்மலை பேரூராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பகுதி, துர்கா நகர், உமையாள்புரம், லட்சுமிபுரம், நாகப்பா நகர், உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து, மலர்தூவி உற்சாக வரவேற்பளித்தனர். பொதுமக்களிடம் அவர் பேசுகையில், ‘‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழகத்திற்கு செய்துள்ளது. அதே போல மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அதிமுக அரசு மீண்டும் செயல்படுத்த இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைய பொதுமக்கள் உதவ வேண்டும்,’ என்றார். அப்போது பொதுமக்கள் ‘நிச்சயம் எங்கள் ஓட்டு உங்களுக்கே, மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் அமையும்’ என அவரிடம் உறுதி அளித்து வாழ்த்தி அனுப்பினார். பிரசாரத்தின்போது, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்….

The post வளர்ச்சி திட்டங்களை பெற்று தருவேன்: சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Sidlapakam Rajendran ,Tambaram ,Tamil Nadu Cottage ,Board ,Pallavaram ,Sidlapakam Rajendran ThirneerMalai ,Dinakaran ,
× RELATED செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற 20ம்...