×

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் மாற்று மதத்தை சேர்ந்தவர் நுழைந்ததாக பரபரப்பு: கோயில் நடையை அடைத்து பரிகார பூஜை

திருவனந்தபுரம்:  பத்மநாபசுவாமி கோயிலில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் நுழைந்ததாக தகவல் வெளியானதையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. திருவனந்தபுரத்தில் பிரசித்திப் பெற்ற பத்மநாபசுவாமி கோயில் உள்ளது. புராதனமான இந்த கோயில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் செல்ல கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆண்கள் வேட்டி அணிந்து, சட்டை அணியாமல்தான் செல்லவேண்டும். பெண்கள் சேலை அணிந்து மட்டுமே செல்லவேண்டும். இந்துக்கள் அல்லாத பிற மதத்தினருக்கு கோயிலில் அனுமதி கிடையாது. இந்நிலையில், நேற்று காலை இந்து அல்லாத ஒருவர் கோயிலுக்கு வந்ததாக பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சில பக்தர்கள் கோயில் தந்திரி சதீசன் நம்பூதிரியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து கோயில் நடையை சாத்தி பரிகார பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டது. தற்போது கோயிலில் ஐப்பசி மாத திருவிழா நடந்து வருகிறது. இதை ஒட்டி மாலை 4.30 மணியளவில் சீவேலி என்னும் சடங்கு நடைபெறும். நேற்று நடை சாத்தப்பட்டு சீவேலி சடங்குகள் நிறுத்தப்பட்டது. தந்திரி சதீசன் நம்பூதிரி தலைமையில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. அப்ேபாது கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாலை 6 மணிக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கோயில் தலைமை நிர்வாக அதிகாரி ரதீசன் தினகரன் நிருபரிடம் கூறியதாவது:
கோயிலில் இந்து அல்லாத ஒருவர் வந்ததாக பக்தர்கள் தந்திரியிடம் கூறியுள்ளனர். கோயில் ஆச்சார விதிமுறைக்கு எதிரான சம்பவம் நடந்தால் பரிகார பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் தந்திரிக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது. அதன்படி சீவேலி சடங்கு நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. நான் நடத்திய விசாரணையில் பிற மதத்தை சேர்ந்த யாரும் வரவில்லை என்று ெதரியவந்தது. இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் அறிக்ைக தாக்கல் செய்யப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotee ,Padmanabhaswamy temple ,Thiruvananthapuram , Padmanabhaswamy templ, Thiruvananthapuram.
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்