×

மக்களவையின் சபாநாயகராக ஆந்திராவின் ராஜமுந்திரி பாஜக எம்பி டகுபதி புரந்தேஸ்வரி தேர்வு?

டெல்லி: மக்களவை சபாநாயகர் வரும் 20ஆம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை சபாநாயகராக ஆந்திராவின் ராஜமுந்திரி பாஜக எம்பி தகுபதி புரந்தேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது. இந்நிலையில், புதிய மக்களவையின் முதல் கூட்டம் வரும் 18 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18 மற்றும் 19 ஆம் தேதிகளில் புதிய எம்பிக்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்படும் நிலையில், 20 ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 21 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார். முன்னதாக மக்களவை சபாநாயகர் குறித்து முடிவு செய்ய கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக வரும் 12 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது. என்டி ராமாராவின் மகளும் பாஜக எம்பியுமான தகுபதி புரந்தேஸ்வரி அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படாததால் மக்களவை சபாநாயகராக அவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

The post மக்களவையின் சபாநாயகராக ஆந்திராவின் ராஜமுந்திரி பாஜக எம்பி டகுபதி புரந்தேஸ்வரி தேர்வு? appeared first on Dinakaran.

Tags : Andhra Rajahmundry ,BJP ,Dagupathi Purantheswari ,Speaker ,Lok Sabha ,Delhi ,Rajahmundry ,Andhra Pradesh ,Dagupathi Purandeshwari ,Speaker of ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...