×

விசாகப்பட்டினம் - கொல்லம் - விசாகப்பட்டினம் இடையே தமிழகம் வழியாக சபரிமலை சிறப்பு ரயில்

சென்னை : விசாகப்பட்டினம் - கொல்லம் - விசாகப்பட்டினம் இடையே தமிழகம் வழியாக சபரிமலை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து நவம்பர் 17, 20, 24, 27; டிசம்பர் 1, 4, 8, 15, 22, 25; மற்றும் ஜனவரி 5, 12, 15 ஆகிய தேதிகளில் இரவு 11:15 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் கொல்லத்தில் இருந்து நவம்பர் 19, 22, 26, 29; டிசம்பர் 3, 6, 10, 17, 24, 27; மற்றும் ஜனவரி 7, 14, 17ம் தேதிகளில் காலை 10மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Visakhapatnam - Kollam ,Visakhapatnam ,Tamil Nadu ,Sabarimala , Visakhapatnam,Kollam,Tamil Nadu ,Sabarimala special train
× RELATED விசாகப்பட்டினம் அருகே வீசிய...