×

மதுரை தனியார் நிறுவனம் மீதான ரூ.1,137 கோடி மோசடி வழக்கில் 3 பேர் முன்ஜாமீன் ரத்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை:  நிலம் வாங்கித் தருவதாக பொய் வாக்குறுதி அளித்து 12 லட்சம் பேரிடம் ரூ.1,137 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை தனியார் நிறுவன முன்னாள் நிர்வாகிகள் 3 பேரின் முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலம் வாங்கித் தருவதாக மதுரையிலிருந்து செயல்பட்டு வந்த டிஸ்க் அசர்ட் லீட் நிறுவனம் பொதுமக்கள் 12 லட்சம் பேரிடம் இருந்து ரூ.1,137 கோடி வசூல் செய்தது. ஆனால், முதலீட்டாளர்களுக்கு நிலம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜனார்த்தனன், உமாமகேஸ்வரன், அருண் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை நிதி மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 இந்நிலையில், இந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து, முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்காக ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற ஓய்வுப்பெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையில் ஒரு குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி என்.பால்வசந்தகுமார் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.   அதில், டிஸ்க் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் ஜனார்த்தனன், உமாமகேஸ்வரன், அருண் ஆகியோர் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த இயக்குனர்களுக்கு எதிராக நீதிபதிகள் பிடிவாரன்ட் பிறப்பித்தனர். இதன்படி 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்காததால் 3 பேருக்கும் ஏற்கனவே வழங்கிய முன்ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது என்றும் 3 பேரும் வரும் 8ம் தேதி மதுரை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai ,firms , Madurai private company,canceled,bail,fraud,case,3 persons,HC,orders,action
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை