×

சென்னை தவிர பல மாவட்டங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை

சென்னை: வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதன்  காரணமாக, தென் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்  என்று வானிலை மையம்  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட  கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, கடந்த 2 நாட்களாக பரவலாக மழை  பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து   வருகிறது. சென்னை மற்றும் புறநகரில் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்துள்ளது.  மேலும் மழை தொடரும். தெற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு  தென் கிழக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அது மேலும்  வலுவடைந்து வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு  வரும்.  இதையடுத்து, நாளை முதல் 8ம் தேதி வரை தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில்,  வட கிழக்கு பருவமழை பெய்யும். பின்னர் அது படிப்படியாக வலுப்பெறும். இந்த நாட்களில் தென்  மாவட்டங்கள் மட்டுமின்றி, வட மாவட்டங்களில் சென்னை தவிர மற்ற நகரத்தில் மழை வலுக்கும்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குமரிக் கடல் மற்றும் மன்னார்  வளைகுடாப் பகுதியில் 7 மற்றும் 8ம் தேதிகளில் கடலில் சீற்றம் காணப்படும்.  எனவே கடலில் மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ  வேகம் வரை காற்று வீசும்.  அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.  ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக  கரைக்கு திரும்ப  வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேற்கண்ட  நிகழ்வுகள் காரணமாக தீபாவளி அன்று தென் தமிழகத்தில் கனமழை பெய்யும். வட  மாவட்டங்களில் பரவலாக மழை  பெய்யும். சென்னையில் மேகமூட்டம் காணப்படும். ஒரு  சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : districts ,Chennai ,monsoon ,honeymoon , Chennai,,honeymoon,intensely northeast, monsoon
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...