×

அமெரிக்க தொலைகாட்சி தொடர் வாய்ப்பு ; FTII தலைவர் பதவியிலிருந்து விலகிய அனுபம் கெர்

புனே; அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருவதால் புனே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவன தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நடிகர் அனுபம் கெர் அறிவித்துள்ளார். னேவில் செயல்பட்டு வரும் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக பிரபல நடிகர் அனுபம் கெர் கடந்த 2017-ல் நியமிக்கப்பட்டார். இவர் பாலிவுட் சினிமாக்களில் முன்னணி குணச்சித்திர நடிகராவார். தமிழில் விஐபி, லிட்டில் ஜான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிப்புக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.  கடந்தாண்டு முதல் இவரை தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகம் புனே எஃப்.டி.ஐ.ஐ தலைவராக நியமித்தது. இந்நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் நடித்து வருவதன் காரணமாக, அப்பதவியிலிருந்து விலகுவதாக தற்போது தெரிவித்துள்ளார். சுமார் 10 மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் எஃப்.டி.டி.ஐ தலைவராக நீடிக்க முடியாது என்பதை விளக்கியுள்ளார். தேவைப்படும் நேரத்தில் தன்னை எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும், மாணவர்கள் கடமையாற்றிட எப்போதும் காத்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerry ,American ,FTII , American television series, Experimental Kerr, FTII
× RELATED அமெரிக்க பூங்காவில் முதன்முறையாக...