×

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவு

மதுரை; நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களுக்கு பத்திரப்பதிவோ, பட்டாவோ வழங்க கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறை ஐஜி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப, பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் சிவகங்கை, மதுரை ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் 2 ஆட்சியர்கள் உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளை தங்க விட கூடாது என உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அருண் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : removal ,occupants , Aquaculture, Occupation, Securities, Strap, Prohibition
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...