×

அமெரிக்க அதிபர் டிரம்பின் செல்போன் பேச்சு ஒட்டுக்கேட்பு: சீனா, ரஷ்யா மீது குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்படுவதாக முன்னாள் மற்றும் இந்நாள் அமெரிக்க அரசு அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:    அதிபர் டிரம்ப் தனது நண்பர்களுடன் உரையாட ஐபோன்களை பயன்படுத்துகிறார். பாதுகாப்பாற்ற இந்த செல்போனால் தகவல் கசியலாம் என்பதால் அதை தவிர்த்து வெள்ளை மாளிகையில் உள்ள நவீன பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய தொலைபேசிகளை பயன்படுத்துமாறு அதிகாரிகள் அடிக்கடி அவரிடம் கூறி வருகின்றனர். ஆனால், அவர் அதை மறுத்து விடுகிறார்.

  இதனால், டிரம்பின் செல்போன் பேச்சுகளை சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் இடைமறித்து ஒட்டுக்கேட்கின்றன. வெளிநாட்டு அதிகாரிகளுடன் டிரம்ப் பேசும் பேச்சுகளும் ஒட்டுக்கேட்கப்படுவது அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
  சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டுள்ளதால் அமெரிக்க அதிபரின் செல்போன் பேச்சை தனக்கு சாதகமாக சீனா பயன்படுத்துகிறது.  குறிப்பாக டிரம்பின் வர்த்தக உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் சீன உளவு அமைப்புகள் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை ஒட்டுக்கேட்பதால் அமெரிக்காவுடனான வர்த்தக போரை தீவிரமாக்கி வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trumpin ,US ,China ,Russia , US President,Trumpin,Charges against,hina and Russia
× RELATED அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த...