×

வரலாற்று சிறப்புமிக்க அலகாபாத் பெயர் பிரயாக்ராஜ் ஆனது

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரம், ‘பிரயாக்ராஜ்’ என பெயர் மாற்றம் செய்வதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரத்தில்தான் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. கடந்த காலங்களில் இது பிரயாக் என்று அழைக்கப்பட்டதாக வரலாறும் உள்ளது. பிரயாக் நகரின் பெயர், முகலாயர் ஆட்சிக்காலத்தில் அலகாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், அலகாபாத் என்ற பெயரை அடுத்த ஆண்டு அங்கு நடைபெற உள்ள கும்பமேளாவிற்கு முன்னதாக பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அலகாபாத் நகரை பிரயாக்ராஜ் என மாற்றம் செய்வது குறித்து முன்ெமாழியப்பட்டது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் சித்தார்த்த நாத் கூறுகையில், “கும்பமேளாவிற்கு முன்னதாக அலகாபாத் நகருக்கு பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்வதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அலகாபாத் இனி புராண காலத்து பெயரான பிரயாக்ராஜ் என அழைக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Allahabad , Allahabad, Prayagraj
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 25...