×

சாலையோர வியாபாரிகளுக்கு கடை: ஐட்ரீம்ஸ் இரா.மூர்த்தி உறுதி

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் இரா.மூர்த்தி, நேற்று காலை ராயபுரம் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட பனைமர தொட்டி பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, கல்மண்டபம், வெங்கடேசன் தெரு, மேற்கு மாதா கோயில் தெரு, அம்மன் கோயில் தெரு, அரத்தூன் சாலை, சின்னாதெரு, எம்.எஸ்.கோயில் தெரு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடமும் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ராயபுரம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை கொண்டு வருவேன். சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் கட்டித்தர ஏற்பாடு செய்வேன். குடிநீர், கழிவுநீர் பிரச்னையை தீர்த்து வைப்பேன். எப்போது வேண்டுமானாலும் என்னிடம் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். தமிழகத்தில் நிலையான ஆட்சி வேண்டுமா, அடிமை ஆட்சி வேண்டுமா, என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இப்பகுதியில் சமுதாயக்கூடம், பூங்கா, விளையாட்டு திடல் ஆகியவை அமைத்து தருவேன். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள்,’ என்றார். ராயபுரம் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, பகுதி செயலாளர்கள் வ.பே.சுரேஷ், செந்தில்குமார், வட்டசெயலாளர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்….

The post சாலையோர வியாபாரிகளுக்கு கடை: ஐட்ரீம்ஸ் இரா.மூர்த்தி உறுதி appeared first on Dinakaran.

Tags : iDreams Ira ,Rayapuram ,Djagagam ,iDreams ,Ira Murthi ,Raipuram ,Moothie ,
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது