×

குப்பையில் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை: அமமுக வேட்பாளர் கரிகாலன் உறுதி

தாம்பரம்: தாம்பரம் தொகுதி அம்மா மக்கள் முன்னேற கழக வேட்பாளர் கரிகாலன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று மாலை செம்பாக்கம் பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தற்போது வீடுகளில் இருந்து குப்பை எடுக்க, நகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு தனியாக வரி வசூல் செய்கிறது. நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், வேங்கடமங்கலத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும்  திட்டத்தை அமல்படுத்துவேன். மேலும், வீடு வீடாக குப்பை இருந்தால் கொடுங்கள், காசு தருகிறோம் என்ற நிலையை மாற்றுவேன். தொகுதிக்கு தேவையானை அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன்,’’ என்றார். அப்போது அவரிடம் பொதுமக்கள், ‘‘நிச்சயமாக குக்கர் சின்னத்தில் வாக்களித்து உங்களை வெற்றிபெற செய்வதுடன், டிடிவி தினகரனை தமிழக முதல்வராக தேர்ந்தெடுப்போம்.’’ என உறுதி அளித்தனர். பிரசாரத்தின்போது, அமமுக செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், செம்பாக்கம் நகர செயலாளர் சேகர், செம்பாக்கம் சக்தி உட்பட அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்….

The post குப்பையில் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை: அமமுக வேட்பாளர் கரிகாலன் உறுதி appeared first on Dinakaran.

Tags : AAMK ,Karikalan ,Thambaram ,Amma ,People's Progress Party ,
× RELATED ஈயம், பித்தளை வியாபாரியின் புலம்பல்...