×

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மீண்டும் அறுந்து விழுந்த மின்கம்பி: ரயில் சேவைகள் பாதிப்பு

தூத்துக்குடி: கோயில்பட்டி அருகே மீண்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மீண்டும் மின்கம்பி அறுந்து விழுந்ததில் தென் மாவட்டங்களில் இருந்து மும்பை, பெங்களூருவிற்கு செல்லும் ரயிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டியில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து, ரயில்களுக்கான மின்கம்பியில் விழுந்தது. இதனால் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 மணி நேரம் ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள், உடனடியாக மின்சாரத்தை துண்டித்து, அறுந்துவிழுந்த மின்கம்பியை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கன்னியாகுமரி, முத்துநகர், நெல்லை, திருச்செந்தூர், அனந்தபுரி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டுச் சென்றன. அறுந்துவிழுந்த மின்கம்பியை முழுமையாக சீரமைக்க 2 நாட்கள் ஆகும் என்பதால், அதுவரை குறிப்பிட்ட பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்திலேயே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மின்னிணைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில் இன்று காலை அனந்தபுரி விரைவு ரயில் அதிவேகமாக வந்ததால் மீண்டும் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ரயில்களை இயக்குவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் நிலையங்களில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாக்கப் பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kovilpatti,railway station,power line,Train stop
× RELATED நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!