×

வள்ளியூர் - திருச்செந்தூர் சாலை விரிவாக்கம்: நவீன கேமரா மூலம் போக்குவரத்து கண்காணிப்பு

உடன்குடி: வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் வரையிலான சாலை விரிவாக்கத்துக்கான இறுதிக்கட்ட அளவீடு தீவிரமாக நடந்துவரும் நிலையில் வாகன போக்குவரத்து நவீன கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ள ஒருவழிச்சாலையாக இருந்த பகுதிகள் வாகனப்போக்குவரத்தை கணக்கிட்டு தற்போது அகலப்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி, சாத்தான்குளம், இட்டமொழி வழியாக வள்ளியூர் வரை சாலைகள் சிறிதளவு அகலப்படுத்தப்பட்டன. அப்போது பரமன்குறிச்சியில் பெருவாரியாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரவுண்டானா அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அதிகளவில் வாகனப்போக்குவரத்தால் நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது சாலை விரிவாக்கம் செய்வதற்கான பல்வேறு கட்டப்பணிகளில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையை விரிவாக்க செய்யவும், எவ்வளவு இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன, எந்தெந்த பகுதிகள் சாலை அமைய இடையூறாக இருக்கும் அதனை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் வரை சேட்டிலைட் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதனையடுத்து சாலையின் ஓரத்தில் ஒரு அளவீடு கல் நடப்பட்டன. தொடர்ந்து பொறியாளர்கள் பலர் களஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நடந்து வரும் இறுதி கட்ட ஆய்வின் சுமார் 1970 காலகட்டங்களில் உள்ள அரசின் ஆவணங்கள் மூலம் எந்ததெந்த இடங்கள் ஆக்கிரமிப்புள் செய்யப்பட்டுள்ளன,

நத்த இடங்கள் எவ்வளவு பட்டா நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் மூலம் தற்போது இறுதி கட்ட அளவீடு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் வரை சாலையின் ஓரங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்றி மாற்று இடங்களில் நடவும், தரைப்பாலங்கள், பல ஆண்டுகளுக்கு முன்னர் தூர்ந்து போன சிறிய நீரோடைகள் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. எனவே அதுசம்பந்தமாக அந்தந்த துறைகளுக்கு தனித்தனியே சாலை அகலப்படுத்துவதற்கென நடைபெறும் பணி குறித்து அனுப்பியுள்ளனர்.
தற்போது வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் வரை எவ்வளவு தொலைவு உள்ளது என்பதை குறிக்கும் வகையிலும், முக்கியமான ஊர்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு தூரத்தை குறைக்கும் வகையில் அளவீடு செய்யப்பட்டு சாலையின் நடுவே ஆணி அடித்து அந்த கிலோமீட்டர் தூரத்தை குறித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் கடந்த ஒருவாரகாலமாக மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி ஊரின் ஒதுக்குப்புறத்தில் சாலையின் ஓரத்தில் நவீன கண்காணிப்பு கேமரா அமைத்து இரவு பகலாக அந்த பகுதியில் தங்கியிருந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்கள் இந்த ஆய்வு நடைபெறும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Valliyur, Tiruchendur, road expansion, modern cameras, transport, and one bus
× RELATED ஜூன் 1ம் தேதி முதல் தலைமை செயலக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம்