×

பிரதமர் அருகில் உட்கார்ந்து எடப்பாடியால் பேச முடியாது: கே.எஸ் அழகிரி பேச்சு

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதி வேட்பாளர் ஸ்டாலினை ஆதரித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று மதியம் பொது மக்களிடையே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘‘ஒரு அரசாங்கத்தின் கடமை விலைவாசியை கட்டுப்படுத்துவது தான்.  ஆனால், எடப்பாடியால் கட்டுப்படுத்த முடியவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைந்தால் கூட பெட்ரோல் டீசல் விலையை குறைத்து கொடுக்க மோடியால் முடியவில்லை. ஸ்டாலின் படிபடியாக  உயர்ந்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார், எடப்பாடி பழனிசாமி  அப்படி இல்லை ஊர்ந்து, நகர்ந்து, தவழ்ந்து வந்து ஆட்சியை பெற்றாரா என தெரியவில்லை. ஆனால், அவர் நடந்து வந்து பெறவில்லை. பாமக, பாஜ, எடப்பாடியை முதல்வர் வேட்பாளர் என்று நீண்ட காலமாக சொல்லவில்லை. முதல்வராக இருந்த  கலைஞர், காமராஜர்  உள்ளிட்ட நிறைய பேர்  எல்லாம் பிரதமருடன் ஒன்றாக அமர்ந்து பேசுவார்கள், ஆனால், எடப்பாடியால் பிரதமருடன்  அப்படி அமர்ந்து பேச முடியாத ஆற்றல் உடையவர். கருணாநிதி, ஜெயலலிதா போன்று பெயர் சொல்ல கூடிய தலைவர் இல்லாத நிலையில் ஸ்டாலின் பெயர் சொல்ல கூடிய தலைவராக இருக்கிறார் என்றார்….

The post பிரதமர் அருகில் உட்கார்ந்து எடப்பாடியால் பேச முடியாது: கே.எஸ் அழகிரி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,KS Alagiri ,Chennai ,Tamil Nadu Congress Party ,Chennai Kolathur ,Stalin ,
× RELATED ஓபிஎஸ் 2 நாளில் நல்ல முடிவு தவெக – அமமுக...