×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டோக்கன் இல்லாதவர்களுக்கு சொர்க்கவாசல் தரிசனம் இல்லை: தலைமை செயல் அதிகாரி தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக 8 லட்சம் பக்தர்கள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டோக்கன் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று தலைமை செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியன்று திறக்கப்படும் சொர்க்கவாசலில் அதிகளவு பக்தர்களை அனுமதிக்க கடந்தாண்டு முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதேபோல், இந்தாண்டும் வரும் 2ம்தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறந்து 11ம்தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 10 நாட்களில் 8 லட்சம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்பும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தலா ரூ.10 ஆயிரம் வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை செலுத்தியவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் விஐபி டிக்கெட் ஆன்லைனில் விற்கப்படுகின்றன. பக்தர்கள் நேரடியாக இலவச டோக்கன்கள் பெரும் விதமாக 9 இடங்களில் திருப்பதியில் 90 கவுன்டர்கள் நேர ஒதுக்கீடு செய்து வழங்கப்படும். இதனை ஜனவரி 1ம்தேதி மதியம் 2 மணிக்கு வழங்கப்படும். கொரோனா நாடு முழுவதும் பரவி வரக்கூடிய நிலையில் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 4.50 லட்சம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் டோக்கன்களை பெற முன்கூட்டியே வந்து காத்திருப்பதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட், இலவச டோக்கன்கள் பெற்றவர்கள் மட்டுமே வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் நுழைவு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். டோக்கன் இல்லாதவர்களுக்கு தரிசனம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். …

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டோக்கன் இல்லாதவர்களுக்கு சொர்க்கவாசல் தரிசனம் இல்லை: தலைமை செயல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirupati Seven Malayan Temple ,Tirumala ,Vaikunda Ekadasi ,Tirupati Eyumalayan temple ,Tirupati Eummalayan temple ,
× RELATED டீசல் நிரப்ப வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது: தெலங்கானாவில் பரபரப்பு