×

‘அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவாய்’ பிரகாஷ்ராஜுக்கு பாஜ எம்எல்ஏ கொலை மிரட்டல்

உடுப்பி: டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த வாரம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் பங்கேற்றார். அப்போது ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை அவர் கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உடுப்பியில் பாஜ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய பாஜ எம்எல்ஏ யாஷ்பால் சுவர்ணா, பிரகாஷ்ராஜை கடுமையாக எச்சரித்தார்.

அப்போது அவர், ‘நடிகர்களின் மனதில் நஞ்சை விதைப்பதை பிரகாஷ்ராஜ் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், அரபிக்கடலில் மீன்களுக்கு அவர் இரையாக மாறுவார். வெளிநாட்டு நிதியுதவியை பெற்றுக்கொண்டு, நாட்டில் வன்முறையை தூண்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முயற்சி செய்கிறது. ஜந்தர் மந்தரில் நடந்த நீட் தேர்வு தொடர்பான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உண்மையான மாணவர்கள் அல்ல. அவர்களின் பின்னணியை சோதித்தால் உண்மை வெளியே வரும். இத்தகைய அரசியலை தொடர்ந்தால், பாஜ தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’ என்று எச்சரித்தார்.

Tags : Arabian Sea ,BJP ,MLA ,Prakash Raj ,Udupi ,Cockroach Janata Party ,Delhi ,Jantar Mantar ,Union government ,Congress parties ,Yashpal Swarna ,
× RELATED அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுத்தாங்க: ரேஷ்மா பிரசாத் பகீர்