×

மாற்றுத்திறனாளி சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய சிம்ரன்

சென்னை: ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, தனது மாற்றுத்திறனை ஒரு தடையாக நினைக்காமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடனத்தின் மீது கொண்டிருந்த பேரார்வத்தால் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தார். நடிகை சிம்ரனின் நடனங்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த நிஷா, சிம்ரன் நடித்த பாடல்களுக்கு அவரைப் போலவே நடனமாடி தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார்.

நிஷாவின் நடனக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது திறமையையும் தன்னம்பிக்கையையும் பலரிடம் கொண்டு சென்ற தன்னார்வலர் ஆஷிக், நிஷாவைப் பற்றியும் அவரது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் சிம்ரனிடம் கூறினார். மேலும், தினமும் பள்ளிக்குச் செல்ல ஒரு சைக்கிள் வேண்டும் என்பது நிஷாவின் நீண்டநாள் ஆசை என்பதையும் தெரிவித்தார். இதையறிந்த நடிகை சிம்ரன், நிஷாவை நேரில் சந்தித்து அவருக்கு சைக்கிள் வழங்கினார். தொடர்ந்து படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நிஷாவுக்கு சிம்ரன் அறிவுரை வழங்கினார்.

Tags : Simran ,Chennai ,Nisha ,Ashik ,
× RELATED ‘அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவாய்’...