ராமாயணா படம் 3டியில் உருவாகி வருகிறது. நமீத் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படம், இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் நிலையில், தலா ஒரு பாகத்திற்கு ரூ. 2000 கோடி பட்ஜெட் என கூறப்படுகிறது. இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் ராமாயணா உருவாகி வருகிறது.
இப்படத்தை நிதேஷ் திவாரி இயக்க, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, சன்னி தியோல், யஷ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஹாலிவுட் பிரபலம் ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகமும், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டாம் பாகமும் வெளிவரவுள்ளது. இந்நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ராமாயணா முதல் பாகத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
