×

பாலியல் துன்புறுத்தலால் அவதிப்பட்டேன்: சல்மான் கான் சகோதரர் பகீர்

மும்பை: பாலிவுட் நடிகர் சோஹைல் கான் (54), சீமா சஜ்தேவை கடந்த 1998ம் ஆண்டு திருமணம் செய்தார். 24 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின்பு, கடந்த 2022ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். எனினும், தங்கள் மகன்கள் நிர்வாண், யோகான் ஆகியோரை இருவரும் இணைந்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் சோஹைல் கான், தனக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான கடந்த கால சம்பவம் குறித்து பேசுகையில், ‘நான் வாலிபனாக இருந்தபோது ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அவதிப்பட்டேன்.

எதிர்பாராத அந்த அதிர்ச்சியை பல வருடங்களாக எனக்குள்ளேயே புதைத்து வைத்திருந்தேன். நான் வளர்ந்து பெரியவனான பிறகே அதுபற்றி எனது தந்தையிடம் சொன்னேன். யாரிடமாவது பாலியல் தொல்லைகளையோ அல்லது அச்சுறுத்தல்களையோ எதிர்கொண்டால், அதை வெளியில் சொல்ல வெட்கப்படவோ அல்லது சங்கடப்படவோ வேண்டாம் என்று, தற்போது எனது மகன்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்’ என்றார்.

Tags : Salman Khan ,Fakir ,Mumbai ,Bollywood ,Sohail Khan ,Seema Sajdeh ,Nirwan ,Yogan ,
× RELATED அஜித் படம் உள்பட படங்களை நிராகரித்த ஸ்ரீலீலா