×

சூரிய நமஸ்காரம் செய்வது போல சந்திர நமஸ்காரம் செய்வது இல்லையே ஏன்?

?சூரிய நமஸ்காரம் செய்வது போல சந்திர நமஸ்காரம் செய்வது இல்லையே ஏன்? சந்திர நமஸ்காரம் செய்யலாமா?- அயன்புரம் த.சத்தியநாராயணன்.சந்திர தரிசனம் என்ற வார்த்தையை பஞ்சாங்கத்திலேயே காணமுடியுமே… ஒவ்வொரு மாதமும் அமாவாசை கழிந்த இரண்டாவது நாளில் சந்திர தரிசனம் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். அப்படியென்றால் சந்திரனை தரிசிக்க வேண்டும் என்றுதானே அர்த்தம். பிரதி மாதந்தோறும் வருகின்ற முழுநிலவு நாளை வைத்துத்தானே நமது தமிழ் மாதத்தின் பெயர்களும் அமைந்திருக்கின்றன. அவ்வாறு இருக்க சந்திரனை தரிசித்து நமஸ்கரிக்க வேண்டியது அவசியம்தானே. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது போல சந்திரனை நாள்தோறும் நமஸ்கரிக்க இயலாவிட்டாலும், பௌர்ணமி நாளில் நமஸ்கரிப்பது நல்லது. அதே போல, சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை தரிசித்துவிட்டு உடன் சந்திர தரிசனம் செய்வதால் மனதில் உள்ள சங்கடங்கள் அனைத்தும் விலகி நிம்மதி என்பது நிலைத்திருக்கும். மனோகாரகன் ஆகிய சந்திரனை கண்டிப்பாக நமஸ்கரிக்க வேண்டும்….

The post சூரிய நமஸ்காரம் செய்வது போல சந்திர நமஸ்காரம் செய்வது இல்லையே ஏன்? appeared first on Dinakaran.

Tags : Chandra Namaskar ,Surya Namaskar ,Moon Namaskar ,Chandra ,Ayanpuram ,D.Sathyanarayanan. ,Chandra darshanam ,
× RELATED பெண்கள் ஏன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்?