×

மனு விமர்சனம்…

சராசரி குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஸ்ரீயுத், பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியான விஜய் செல்வனின் மகள் ரேஷ்மாவை காதலிக்கிறார். சாதி, கவுரவம், அந்தஸ்து பார்க்கும் விஜய் செல்வன், தனது மகளின் காதலுக்கு தடை போடுகிறார். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு ஓடுகின்றனர். இதையறிந்த விஜய் செல்வன், தனது அடியாட்களை அனுப்பி, இருவரது தலையையும் வெட்டி கொண்டு வரும்படி உத்தரவிடுகிறார்.

பிறகு என்ன நடக்கிறது? காதலர்கள் இணைந்தார்களா என்பது மீதி கதை. இளம் காதலர்களாக வரும் ஸ்ரீயுத், ரேஷ்மா ஜோடி நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகின்றனர். சாதிவெறி பிடித்த அம்பலத்துக்காரர் விஜய் செல்வன், வழக்கமான வில்லனாக கர்ஜித்துள்ளார். மற்றும் ஐயப்பன் ஜெய், தேவிஸ்ரீ, கவுரி, ராஜேஷ், துர்கா பி.எஸ் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.

வீனஸ் மூர்த்தி, மாரி செல்வராஜின் ஒளிப்பதிவும், ஹர்ஷா கோகாட்டின் பின்னணி இசையும் காட்சிகளை நகர்த்த உதவியுள்ளன. கோடீஸ்வரனின் பாடல்களும், குழந்தை முருகனின் வசனமும் எளிமையாக இருக்கின்றன. ஆணவக் கொலைகளுக்கு முடிவே கிடையாது என்று சொன்ன இயக்குனர் துர்கா பி.எஸ்., காதலர்கள் வழக்கமாக சந்திக்கும் பிரச்னைகளையே சொல்லியிருக்கிறார். டெக்னிக்கல் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

Tags : Shreyut ,Reshma ,Vijay Selvan ,Sriyut ,
× RELATED டாக்ஸிக் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு