×

கந்தனுக்கு அரோகரா!

*கந்தபுராணத்தின் ஒரு பகுதியான சங்கர ஸம்ஹிதை முருகனே ‘பரப்ரம்ஹம்’ என உறுதியாகக் கூறுகிறது. *கச்சியப்ப சிவாச்சாரியார், தம் கந்தபுராணத்தின் பல இடங்களில் முருகன் மும்மூர்த்தி வடிவினன் என்று குறிப்பிடுகிறார்.*முருகனை கிருத்திகை நட்சத்திர தினத்தன்றும், செவ்வாய்க்கிழமைகளிலும் வழிபட்டு தீபம், மணி  சமர்ப்பித்தால் வாக்கு மேன்மை ஏற்படும் என்கிறது சிவபுராணம்.  *தட்சிணாமூர்த்தி வடிவில்தான் சனத்குமாரருக்கு செய்த உபதேசங்களை அவர் முழுமையாகக் கற்றுக் கொண்டதால், ஈசனாக தான் அவரிடமிருந்து உபதேசம் பெற விரும்பினார். அவரைத் திருப்திப்படுத்தவே சனத்குமாரர் முருகனாக தோன்றி உபதேசம் செய்தார் என்பார்கள்.*திலக ஸ்வாமி வடிவினனாக முருகனை பூஜிப்பவர்கள் காரியசித்தி பெறுவர் என யாஞ்யவல்க்ய மகரிஷி கூறியருளியுள்ளார்.*விசுவாமித்திரருடன் கானகம் சென்ற ராம – லட்சுமணரை ஈசனின் பின்னால் செல்லும் இரு முருகன்கள் போல் தோன்றினர் என்று தன் ராமாயணத்தில் விவரிக்கிறார் வால்மீகி முனிவர். *முருகப்பெருமானை உபாசிக்கும் அடியார்களுக்கு பயம், அழிவு, சத்ரு, வியாதி, இவை அனைத்துமே அண்டாது.*கம்பன் தன் ராமாயண யுத்த காண்டத்திலே இந்திரஜித்தை முருகனுக்கு நிகராகவே போற்றிப் புகழ்கிறார்.*ஆதித்ய ஹ்ருதய மகாமந்திரத்தில் அகத்தியர் ஆதித்யனை ‘ஸ்கந்த’ என்று முருகப் பெருமானோடு ஒப்பிடுகிறார்.*விராடன் மனைவி ஸ்தேஷ்ணாவின் ஆணைப்படி கீசகனின் வீட்டிற்குச் சென்ற திரௌபதி தன்னை ஆபத்திலிருந்து காக்க ருத்ரன், அக்னி, பகன், விஷ்ணு, சூர்யன், ஸாவித்ரி, பிரம்மா இவர்களோடு ஸ்கந்தனையும் துதித்தாள்.*மகாபாரதத்தின் வனபர்வா, சல்யபர்வா, அனுசாசனபர்வா ஆகிய மூன்று பகுதிகளில் ஸ்கந்தனுடைய கதைகள் கூறப்பட்டுள்ளன. *பகவத்கீதையில் கிருஷ்ணர் ‘ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த:’ என்று அருளியுள்ளார்.*குமார தந்த்ரத்தில் முருகனுடைய மயிலுக்கும் காயத்ரி மந்திரம் அருளப்பட்டுள்ளது: ‘சுக்லாபாங்காய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி தந்நோ: மயூர ப்ரசோதயாத்’ என்பதே அந்த மந்திரம்.*சுப்ரமண்ய ப்ரதிஷ்டாவிதி நூலில் முருகனின் மற்றொரு வாகனமான யானை ஐராவத குலத்தில் உதித்தது, வெண்ணிறம், நான்கு தந்தங்கள் கொண்டது, மிகவும் பலமுள்ளது என விவரிக்கப்பட்டுள்ளது.*முருகனின் வேலாயுதம் சக்தி மிக்கது. ‘வேலாயுதத்திற்கு மேலாயுதமில்லை’ என்ற பழமொழியே உள்ளது.*ஈசனின் ஸர்வஞ்த்வம், திருப்தி, அனாதிபோதம், ஸ்வாதந்த்ரியம், அலுப்த சக்தி, அனந்த சக்தி போன்ற குணங்களே முருகனின் ஆறுமுகங்கள் என்கிறது கந்தபுராணம். *வடநாட்டில் முருகனை பிரம்மச்சாரியாகவே வழிபடுகின்றனர். *சுவாமிநாத பெருமானை பலபட்டடை சொக்கநாதப்புலவர் இரு பொருள்பட பாடிய ‘வெங்காயம் சுக்கானால்’ எனும் பாடலில் முருகனை ஏரகத்துச் செட்டியார் என அழைக்கிறார்!*முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் ஆறு ஸஹஸ்ரநாம அர்ச்சனை மந்திரங்கள் உண்டு. *சிங்கப்பூர் டேங்க் ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி ஆலய முருகனுக்கு சீனர்கள் உட்பட பல்வேறு நாட்டு மக்கள் பக்தர்களாகத் திகழ்கின்றனர். *பினாங்கில் தண்ணீர்மலையானாக வலது தொடையில் மரகதம் பதித்தாற்போல் மச்சமுடன் தண்டபாணி அருள்கிறான். இக்கோயில் முழுவதும் பர்மா தேக்கு மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. *இலங்கை மட்டக்கிளப்பில் உகந்தைமலை முருகன் அருள்கிறான். இங்கே முருகனுக்கு முன் மயிலுக்குப் பதில் மூஞ்சுறு பிரதிஷ்டை செய்யப்படுள்ளது வித்தியாசமானது.*யாழ்ப்பாணம் தேவபுரத்தில் கதிர்வேலாயுதசுவாமி திருவருள் புரிகிறார். இங்குள்ள உற்சவ விக்ரகங்கள் தமிழகத்தின் சுவாமிமலையில் செய்யப்பட்டவை….

The post கந்தனுக்கு அரோகரா! appeared first on Dinakaran.

Tags : Sankara Samhita ,Muruga ,Kachiyappa Sivacharya ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் 2ம் நாள்...