×

பிரதம கணங்கள்

சிவபெருமானின் அணுக்கத் தொண்டர்களாகப் பூதர்கள் விளங்குகின்றனர். அவருக்குரிய அனைத்துப் பணிகளையும் அவர்கள் செய்கின்றனர். சிவபூதர்களைப் பிரதம கணங்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. வடமொழியில் இவர்களைப் பாரிஷர்கள் என்று குறித்துள்ளனர். தமிழில் பாரிடம் என்று வழங்கப் படும். தேவாரத்துள் அனேக இடங்களில் பாரிடங்கள் குறிக்கப்பட்டுள்ளனர். ‘‘கழுதொடு பாரிடம் கைதொழுதேத்த ஆடும் எம் அடிகள்’’ என வரும் தொடர்கள் மூலம் இதை அறியலாம்.காசிக் கண்டம் என்னும் நூலில் பிரதம கணங்களின் பெயரும் அவர்கள் காசியில் அமைத்து வழிபட்ட லிங்கங்களின் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. சங்குகர்ணனும், மகாகாலனும் அதியுன்னத வீரர்கள். இவர்கள் சிவபெருமானுக்கு துவார பாலகர்களாக உள்ளனர். கண்டாகர்ணனும் மகோதரனும் பெருமானுடைய மாளிகையின் மேலைக் கோபுரத்தைக் காவல்புரிகின்றனர்.சோம நந்தி, நந்திசேனன், காலன், பிங்கலன், குக்குடன் ஆகிய ஐந்து பேருக்குப் பஞ்ச கணங்கள் என்று பெயர். இவர்கள் காசியில் பஞ்சலிங்கங்களை அமைத்துள்ளனர்.தில தர்ப்பணன், ஸ்தூலகர்ணன், த்ருமி, சண்டன், ப்ரபாமயன், சுகேசன், பினதந்தன், சாகன், கபர்த்தினன், பிங்கலாட்சன், கிராதன், பஞ்சாட்சன், சதுர்முகன், பாரபூதன், திரியக்ஷன், க்ஷேமகன், லாங்கலின், விராதன், சுமுகன், ஆஷாடன் முதலியோர் முக்கியமான பாரிடங் களாவர்.இவர்கள் மகா யுத்த வீரர்களாகவும், இசைக்கருவியினை இசைப்பதில் வல்லவர்களாகவும் உள்ளனர். இத்தகைய ஒரு கோடி பூதங்கள் காசி நகரைக் காத்து நிற்பதாகக் புராணங்கள் கூறுகின்றது.சிவகணங்களில் குந்தன், மயூரன், குக்குடன் என்று மூன்று கணங்கள் உள்ளனர். இவர்கள் முருகனுக்குரிய வேல், மயில், சேவல் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள். மேலும், சாகன், விசாகன் என்ற பூதர்களைக் காண்கிறோம். இவர்கள் சிவனுடைய ஆணையைப் பெற்று முருகனின் வாயிற் காவலர்களாக விளங்குகின்றனர். லம்போதரன், கும்போதரன் என்னும் பிரதம கணங்கள் சிவனுடைய ஆணையால் விநாயகப் பெருமானுக்குத் தலைமைப் பணியாளர்களாகவும், அவருடைய ஆலயத்தின் துவார பாலகராகவும் விளங்கி வருகின்றனர். – மோகனா…

The post பிரதம கணங்கள் appeared first on Dinakaran.

Tags : Bhuttos ,Lord Shiva ,Shiva ,Buddhas ,
× RELATED திருத்தெற்றியம்பலம் பள்ளிகொண்ட பெருமாள்