×

திருமணத் தடைக்கான காரணங்கள்!

செவ்வாய் தோஷம் மற்றும் ராகு – கேது தோஷங்கள் மட்டும் திருமணத்தடையை ஏற்படுத்துவதில்லை. நம் பாரம்பரிய ஜோதிடத்தில் இன்னும் பல தோஷங்கள் உள்ளன அவை, களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், நட்சத்திர தோஷம், பலதார தோஷம் போன்றவையும் திருமணத்திற்கு தடையை ஏற்படுத்துவதற்கான காரணமாக அமைகிறது. பொதுவில் சில நட்சத்திரங்களின் பெயர்களை கூறி, உதாரணமாக, மூலம், ஆயில்யம், கேட்டை போன்ற நட்சத்திரங்களுக்கு தோஷங்கள் உண்டு எனவும், திருமணம் செய்தால் ஆபத்து உண்டு என்பது போலவும், அவரவர்களாகவே, முடிவு செய்து திருமணத்தை தள்ளிப் போடுகின்றனர். இன்றைய வளரும் வயதின் அட்சய லக்ன ராசிகளுக்கு அத்தோஷங்கள் வேலை செய்யாது என்பதை உணர வேண்டும். உதாரணமாக, ஒரு ஜாதகத்தில் களத்தர காரகன் என்று சொல்லக்கூடிய சுக்கிர பகவான் பலவீனப்பட்டால், களத்திர தோஷம் என்பார்கள். ஆனால், நமது திருமண வயது காலத்தில், அட்சய லக்னத்திற்கு களத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஏழாம் பாவகத்தின் அதிபதி பலவீனப்பட்டிருந்தால் மட்டுமே களத்திர தோஷம் என்று எடுத்துக் கொள்ளலாம். நமது அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில், தனிப்பட்ட கிரகங்களுக்கு தோஷங்களை பொருத்தி பலன் காண்பதில்லை.

அட்சய லக்னத்திற்கு மாங்கல்ய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய, எட்டாம் பாவகத்தின் நிலை சரியில்லை என்றால் மட்டுமே, மாங்கல்ய தோஷம் என்று கொள்ளலாம். அட்சய லக்னத்திற்கு ஏழாம் பாவகத்தோடு, வேறு சில பாவகங்களில் நிலையை பொறுத்து, இரண்டுக்கும் மேற்பட்ட திருமண யோகத்தை ஏற்படுத்தி விடும் என்பதை அறியலாம்.இவை மட்டும் திருமணத் தடைக்கு காரணம் கிடையாது. ஒரு வரன் பார்க்கும் முன்பு, அவரவர் ஜாதகங்களின் வினைப்பயன் என்ன என்பதை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற் போல், வரன் அமைத்தால் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். மாறாக, தனக்குத்தானே (அட்சய லக்ன அதிபதி) மற்றும் அவர்களது தாயார் (சந்திரன்), தந்தையார் (சூரியன்), சகோதர சகோதரிகள் (செவ்வாய்), மாமன் மாமி (புதன்), கிரகங்களே உறவுகளாக மாறி அவர்கள் மூலமாக, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி திருமணத் தடைகளை உண்டு பண்ணுகிறது. அதை களைவதற்கு அட்சயம் லக்ன பத்ததி ஜோதிடம் உங்களுக்கு பேருதவி செய்யும். எவ்வாறெனில், உங்களது அட்சய லக்னத்தின் படி, ஜாதக அமைப்பில் உள்ள கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் சுப நிகழ்வாகவும், சரியான நிலையில் இல்லை என்றால் அசுப நிகழ்வாகவும் அமையும் என்பதை கண்ணாடி போல் காண்பித்து விடும். அட்சய லக்ன கிரக அமைப்பு படி, வாழ்க்கை அமைத்துக் கொண்டால், வாழ்வு சிறப்பு பெறும்.

 

The post திருமணத் தடைக்கான காரணங்கள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED முதற்படைவீடு