×

வாய்ஸ் கொடுத்தவரை கதற வைத்த காட்சி

ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையில் சத்தியம் செய்ததால் ஏற்பட்ட சோதனையை எதிர்கொண்டு இருப்பார்கள். அப்படி ஹீரோ எதிர்கொண்ட பிரச்னைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், ‘ப்ராமிஸ்’. அருண் குமார் சேகரன் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்ய, சரவண தீபன் இசை அமைத்துள்ளார். பாலா பாடல்கள் எழுத, ராம் விக்னேஷ் எடிட்டிங் செய்துள்ளார். முக்கிய வேடங்களில் நதியா சோமு, சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார், கலைவாணி நடித்துள்ளனர். என்.நாகராஜ் வழங்கும் சங்கமித்ரன் புரொடக்‌ஷன், அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

பர்ஸ்ட் லுக்கை சேரன், நட்டி இணைந்து வெளியிட்டனர். வேலூர், ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. சமீபத்தில் இப்படத்துக்கு ‘வாய்ஸ்ஓவர்’ கொடுக்க வந்த தேசிய விருது பெற்ற குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், சில காட்சிகளை பார்த்து நெகிழ்ந்து கதறியழுதார். அவரது பாராட்டு படக்குழுவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. குடும்பத்தினருடன் பார்க்கும் வகையில் உருவாகியுள்ள ‘ப்ராமிஸ்’ படத்தை ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில், வரும் 26ம் தேதி ஜெனிஷ் வெளியிடுகிறார்.

Tags : Arun Kumar Sekaran ,Vinoth Kumar ,Saravana Deepan ,Bala ,Ram Vignesh ,Nadiya Somu ,Sujan ,Amrish ,Pratap ,Gokul ,Sundaravel ,Rajkumar ,Kalaivani ,Sangamithran Productions ,N. Nagaraj ,
× RELATED வாய்ஸ் கொடுத்தவரை கதற வைத்த காட்சி