×

விநாயகப்பெருமான் : பிட்ஸ்

*திருவண்ணாமலையில் உள்ள விநாயகப் பெருமானுக்கு யானை நிறை கொண்ட விநாயகர் என்று பெயர்.*அம்பாசமுத்திரம் காக்யநல்லூரில் முத்தாண்டிப்புலவர் பாடிய பாடலுக்கு ஏற்ப வயிறு வெடித்ததால் வயிறு வெடித்த பிள்ளையார் எனும் பெயரில் விநாயகர் அருள்கிறார்.*திருவாவடுதுறையில் திருமாளிகைத் தேவருக்காக கொட்டு சத்தத்தை தவிர்த்த விநாயகர் கொட்டு சத்தம் தவிர்த்த விநாயகர் என்று வணங்கப்படுகிறார்.*சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி திருத்தலக் கோயிலில் உள்ள விநாயகர் தோகையடி விநாயகராக அருள்கிறார்.*மயிலாடுதுறைக்கு அருகில் தண்டந்தோட்டம் எனும் இடத்தில் உள்ள விநாயகரை மணிக்கட்டி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.*மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் கையில் எழுதுகோலுடன் காட்சி அளிக்கும் விநாயகருக்கு சாட்சி விநாயகர் என்று பெயர்.*கணபதி குண்டம் என்னும் இடத்தில் கணபதி உருவம் பாணலிங்கம் போல் விளங்குவதால் பாலலிங்க கணபதி என்று அழைக்கின்றனர்.*மருதங்குடியில் உள்ள பிள்ளையாருக்கு நீளமாக நாக்கு உள்ளதால் நீளநாக்கு பிள்ளையார் என்று பெயர்.*திருநாட்டியத்தான்குடியில் விரலை நீட்டிய நிலையில் உள்ளதால் கை காட்டி விநாயகர் என்று பெயர்.*திருச்சி, திருபேரன்பில் திருத்தலத்தில் செவி சாய்த்துக் கேட்குமாறு விநாயகர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறார். – டி.பூபதிராவ்…

The post விநாயகப்பெருமான் : பிட்ஸ் appeared first on Dinakaran.

Tags : Vinayagaram ,Thiruvannamalai ,Vinayakkar ,Thirthandippulavar ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...