×

முன்னேற்றப் பாதைக்கான வழி திறக்கும்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா
?மருத்துவமனையில் பணியாற்றி வரும் எனக்கு எச்.ஐ.வி. ஏற்பட்டுள்ளது. இதை எனது கணவரிடம் எப்படி தெரிவிப்பேன்? என் பிள்ளையின் முகத்தை எப்படி பார்ப்பது? தற்கொலை செய்துகொள்ளத்  தோன்றுகிறது. என்னுடைய இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. என் வேதனை தீர பரிகாரம் கூறுங்கள்.

– ஒரு வாசகி.பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்துவருகிறது. முதலில் தற்கொலை என்ற வார்த்தையைத் தூக்கி தூர எறியுங்கள். சிம்ம ராசியில் பிறந்திருக்கும் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் வக்ரம் பெற்ற  சனியுடன் கேதுவின் இணைவு, சுக்கிரன் – ராகுவின் இணைவு, ஆறில் புதன், 12ல் வக்ரம் பெற்ற செவ்வாய், 9ல் குரு நீசம் என பல்வேறு சாதகமற்ற கிரகநிலையைப் பெற்றிருக்கிறீர்கள். என்றாலும்  ராசிநாதன் சூரியனின் பலமும், நான்கில் சந்திரனின் இணைவும் 47 வயது வரை உங்களை வழிநடத்தி வந்திருக்கிறது. சூரியனின் பலம் துணையிருப்பதால் நிச்சயமாக இந்த நோயிலிருந்து உங்களால்  விடுபட இயலும். உயர்படிப்பு முடித்த மருத்துவர் மூலமாக உங்கள் கணவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்ல முயற்சி செய்யுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி ஆங்கில மருத்துவ முறை வெகு  விரைவில் உங்களுக்கு இந்தத் நோயிலிருந்து மீளும் வாய்ப்பு அதிகம். உங்கள் மகனின் ஜாதகப்படியும் தாயாருக்கு நேரம் நன்றாக உள்ளதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.  தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும் ஒன்றிணையும்போது எப்பேர்பட்ட பிரச்னைக்கும் தீர்வு உண்டு. தினமும் காலையில் குளித்து முடித்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 18 முறை சொல்லி நரசிம்மரை  வணங்கி வாருங்கள். ஆறு மாத காலத்திற்குள் உங்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாவதைக் காண்பீர்கள்.“ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ                        நாசனம்ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண                        முக்தயே.”?என் மகனும் ஒரு பெண்ணும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் அந்தப் பெண்ணுக்கு வேறொரு பையனை திருமணம் செய்து வைத்துவிட்டனர். அந்தப் பெண் ஒரு மாதம் கூட வாழாமல் தாய்  வீட்டிற்கு வந்து விட்டார். தற்போது மீண்டும் என் மகனும் அந்தப் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ளனர். எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்பதாக இல்லை. நல்லமுறையில்  என் மகனுக்கு திருமணம் நடைபெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- திருவாரூர் வாசகர்.சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் ராகுபுக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்  பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய செவ்வாய் 12ல் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். அத்துடன் அவரது ஜாதகத்தில் காணப்படுகின்ற சூரியன் – சுக்கிரன் – கேதுவின் இணைவு இதுபோன்ற  நிலைப்பாட்டை அவரது மனத்தில் புகுத்தியுள்ளது. தற்போது நடந்து வரும் ராகுபுக்தியின் காலம் என்பது அத்தனை உசிதமாக இல்லை. அவருடைய ஜாதகத்தில் ராகு எட்டில் அமர்ந்து புக்தியை  நடத்துவதால் அநாவசியமான பிரச்னைகளால் அல்லல்படுவார் என்பதை அறியமுடிகிறது. அத்துடன் ஏழரைச் சனி என்பதும் இணைவதால் கடுமையாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்தச்  சூழலில் மகனைப் பாதுகாக்க வேண்டியது பெற்றோராகிய உங்களது கடமையே. இன்னும் சிறிது காலம் பொறுத்திருக்கச் சொல்லி அறிவுறுத்துங்கள். 03.07.2021 முதல் நல்ல நேரம் துவங்குவதால்  அதன்பின் பார்த்துக்கொள்ளலாம் என்பதைச் சொல்லி இந்தப் பிரச்னையை சிறிது காலத்திற்கு தள்ளிப்போட முயற்சியுங்கள். அடுத்து துவங்க உள்ளது சனி தசையாக இருந்தாலும் ஜாதகத்தில் சனியின்  அமர்விடம் நன்றாக உள்ளதால் சனி தசையின் காலத்தில் அவரது விதிப்பயன்படி எல்லாம் நல்லபடியாக முடியும். வியாழன்தோறும் அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் நாகருக்கு பால் அபிஷேகம் செய்து  வழிபட்டு வாருங்கள். அத்துடன் கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி ராகுவை வழிபட்டு வர மகனின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தைக் காண்பீர்கள்.

“அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்த்தனம்

ஸிம்ஹிகா கர்ப்ப சம்பூதம் தம்ராகும் ப்ரணமாம்யஹம்.”?என் ஜாதகத்தில் ஏதேனும் அதிர்ஷ்ட யோகங்கள் உள்ளதா? நான் தற்போது அரசியலில் உள்ளேன். வருங்காலத்தில் நல்ல நிலைக்கு வருவேனா? கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும் என்று என்  ஜாதகத்தில் உள்ளது. இதற்கு ஒரு நல்ல பரிகாரம் கூறுங்கள்.- ராஜகணபதி, சென்னை.கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும் என்று சொல்லப்படுவதெல்லாம் உண்மையான ஜோதிட பழமொழி அல்ல. இவ்வாறு பொத்தாம் பொதுவாகச் சொல்வதெல்லாம் மூட நம்பிக்கையே. இதற்கு என்று  நீங்கள் தனியாக பரிகாரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து  வருகிறது. உங்கள் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சிப் பலத்துடன் அமர்ந்துள்ளார்கள் என்பதை நீங்களே பட்டியலிட்டு அனுப்பியுள்ளீர்கள். சூரியன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்கள் சொந்த  வீடுகளிலும் ராகு வெற்றியைத் தரும் 11லும் அமர்ந்துள்ளதாகவும் இருப்பினும் ஏதோ ஒரு வகையில் முன்னேற்றத் தடை காண்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் ஜாதகத்தில் குரு மற்றும் சனி  கிரகங்கள் வக்ரகதியில் சஞ்சரிப்பதோடு முறையே எட்டு மற்றும் ஆறு ஆகிய வீடுகளில் சஞ்சரிப்பதும் அத்தனை சாதகமான அம்சம் அல்ல. குரு மற்றும் சனியின் பலமற்ற நிலையே உங்கள்  முன்னேற்றத் தடைக்கான காரணிகளாக உள்ளன. அதேநேரத்தில் தற்போது துவங்கியுள்ள புதன் தசை என்பது உங்கள் துறையில் சாதகமான முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். புதன் வாக்கு ஸ்தானத்தில் சூரியனின் சாரத்துடன் அமர்ந்து தசையை நடத்துவதால் சாமர்த்தியமான செயல்பாடுகள் மூலம் வெற்றி காணத் துவங்குவீர்கள். வரவு நிலையும் உயரத் தொடங்கும். உங்கள்  சாதுர்யமான பேச்சுத்திறனும், புத்திக் கூர்மையுடன் கூடிய செயல்திறனும் உங்களை அரசியலில் பரிணமிக்கச் செய்யும். புதன்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்து வாருங்கள். அத்துடன் குரு –  சனியின் வக்ர சஞ்சாரத்திற்கான பரிகாரமாக தமிழ் மாதத்தின் முதல் நாள் அன்று ஏழ்மை நிலையிலுள்ள ஏதேனும் ஒரு அந்தணருக்கு வஸ்திரம் மற்றும் மளிகைச் சாமான்கள் வாங்கித் தந்து  நமஸ்காரம் செய்துவாருங்கள். தடைகள் நீங்கி முன்னேற்றப் பாதைக்கான வழி திறப்பதைக் கண்கூடாகக் காண்பீர்கள்.?நான் பல வருடங்களாகவே வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். சம்பாதித்தாலும் பத்து ரூபாய் கூட சேமிக்க முடியவில்லை. கட்டிடத் தொழிலாளர்களுக்கு உதவ சங்கம்  ஆரம்பிக்க உள்ளேன். வாழ்வினில் எப்பொழுது முன்னேறுவேன், உரிய வழி காட்டுங்கள்.- ஆறுமுகம், சேலம்.சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. இதுவரை திருமணம் ஆகவில்லை என்று  குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் ஜாதக பலத்தைப் பொறுத்தவரை குடும்ப வாழ்வினைவிட பொதுவாழ்வு என்பது பலமாக உள்ளது. தொழிலாளர்களுக்கு உதவி செய்ய தனியாக சங்கம் ஆரம்பிக்க உள்ளதாகக்  குறிப்பிட்டுள்ளீர்கள். தனியாக சங்கம் ஆரம்பிப்பதை விட ஏற்கனவே உள்ள சங்கத்தில் இணைந்து அதன் மூலமாக பொதுத் தொண்டினை நல்லபடியாகச் செய்ய இயலும். தற்போது சனி தசை நடந்து  வருவதாலும் சனி உங்கள் ஜாதகத்தில் மூன்றாம் வீட்டில் வக்ர கதியில் அமர்ந்திருப்பதாலும் முன்னேற்றத் தடையினை சந்தித்து வருகிறீர்கள். இந்த நேரத்தில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது  அவசியம். 41வது வயது முடியும் காலத்தில் துவங்கும் புதன் தசை உங்கள் வாழ்வினில் புதிய பாதையை உண்டாக்கித் தரும். ஜீவன ஸ்தானத்தில் உச்ச பலத்துடன் புதன் அமர்ந்திருப்பதாலும், பாக்ய ஸ்தானாதிபதி சுக்கிரன் உடன்  இணைந்திருப்பதாலும் புதன் தசையின் காலத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பதோடு உங்கள் கனவுகளும் நனவாகக் காண்பீர்கள். சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஏழை எளிய மக்களுக்கு  அன்னதானம் செய்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள். அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று நவகிரக சந்நதியில் சனிதோறும் விளக்கேற்றி வழிபட்டுவருவதும் நல்லது. பொதுவாழ்விற்காக தங்கள்  வாழ்வினை அர்ப்பணிப்போர் பட்டியலில் உங்கள் பெயரும் இணைய வாழ்த்துக்கள்….

The post முன்னேற்றப் பாதைக்கான வழி திறக்கும் appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Hariprasad Sharma ,Dinakaran ,
× RELATED குண்டர் சட்டத்தில் முதியவர் கைது