×

ஒட்டு பக்கோடா

செய்முறை: புழுங்கல் அரிசியை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் ஜவ்வரிசியை கொஞ்சம், கொஞ்சமாக சட்டியில் போட்டு பொரிய விட வேண்டும். ஆறியதும் அதை மிக்சியில் அரைத்து சலித்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது பொட்டுக்கடலையை மிக்சியில் போட்டு தனியாக அரைத்து, சலித்து எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய், வரமிளகாய், பெருங்காயம், பூண்டு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக போட்டு அரைத்து கொள்ளவும். ஊறிய புழுங்கல் அரிசியை கிரைண்டரில் நைசாக அரைக்க வேண்டும். கடைசியில் சலித்து வைத்துள்ள ஜவ்வரிசி, பொட்டுக்கடலையை அரிசி மாவுடன் சேர்த்து அரைக்கவும். நன்றாக அரைத்ததும் ஒரு ஸ்பூன் வெண்ணெய், உப்பு போட்டு நன்றாக பிசையவும். சட்டியில் எண்ணெயை காய வைத்து பக்கோடா கட்டையில் மாவை வைத்து பிழியவும்… ஒட்டு பக்கோடா ரெடி…!

The post ஒட்டு பக்கோடா appeared first on Dinakaran.

Tags : Otu Pakoda ,
× RELATED திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி...